ஒம் ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமியே நமஹ

முதல் பக்கம் வரலாறு சேவைகள் பூஜை தேதிகள் தெய்வீக அனுபவங்கள் தொடர்பு

2022 Pooja details- please click here

ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ

பரப்பிரம்மத்தின் முழு அவதாரமாய், முழுமுதற்பொருளின் மானிட வடிவமாய், சடாமுடியோ, கம்பீரமான தோற்றமோ இல்லாமல், ருத்திராட்சம் அணியாமல், காவி உடுத்தாமல், கமண்டலம் எடுக்காமல் ஏன் கௌபீனம் கூட இல்லாமல் - இயற்கை அன்னை தன்னைப் படைத்த வண்ணமே, ஒரு மாமுனிவர் இப்புண்ணிய பூமியாம் பரத கண்டத்தில் உலகை உய்விக்கும் பொருட்டு அண்மைக்காலத்தில் எழுந்தருளியிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒர் ஏகாந்தமான காடோ, மலையோ, குகையோ அன்று; கங்கை, நர்மதை, காவிரி போன்ற நதித்தீரமும் அன்று; தமிழ்நாட்டில் கசவனம்பட்டி என்னும் குக்கிராமமே அத்திருத்தலமாகும். அவர்கள் ஒர் அவதூதராகவும் (நிர்வாண முனிவர்), மிகவுயர்ந்த ஞானியாகவும், “தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர்கள்.

கசவனம்பட்டி போகும் வழி

சென்னை அல்லது எந்த ஊரிலிருந்தும்:

முதலில் திண்டுக்கல் செல்லுங்கள். கன்னிவாடி அருகில் இருக்கும் கசவனம்பட்டிக்கு திண்டுக்கல்லிலிருந்து பேருந்துகள் செல்கின்றன.   ஆட்டோவிலும் செல்லலாம்.

கசவை கண்ட கயிலை மூர்த்தி

ஊர் பேர் தெரியாத மௌனியாய் வாழ்ந்த ஒரு மாமுனிவரைப் பற்றி நூல் எழுதுவது என்பது எளிதான செயலன்று. இருப்பினும் இப்படிப்பட்ட மகானின் மகிமையை உலகறியச் செய்யும் பொருட்டு இந்நூலின் ஆசிரியர் பெருமுயற்சி செய்து தேவையான, கிடைக்கப்பெற்ற எல்லாச் செய்திகளையும், படங்களையும் சேகரித்து, இந்நூலை ஆக்கி வெளியிட்டுள்ளார். இந்த மகான் மௌனமாகவே தன் செய்தியை வழங்கியதனால் இது தான் அவருடைய உபதேசம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையில், பலருக்கும் நன்கு தெரிந்த வேறு சில மகான்கள் வழங்கிய அருள்மொழிகள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளார்.

            இந்நூலில் தரப்பட்டுள்ள புகைப்படங்களையும் அவற்றின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களையும், தினமும் ஒரு தடவையேனும் வாசித்தும், பார்த்தும் வந்தால் அதுவே ஒரு விதத் தியானமும், ஆன்மிக சாதனமும் ஆகும். சுவாமிகளுடைய அருளைப் பெறுவதற்கும் தகுதியுடையவராக்கும்.

இந்த புத்தகத்தை கோவிலிலிருந்து நேரிலோ அல்லது தபால் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

நூலின் விலை (தபால் செலவும் சேர்த்து): தயவுசெய்து மணியார்டர், காசோலை  அல்லது வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்

இந்தியாவில்: Rs 75

வெளிநாடு: Rs 300

Address:

I. Anandan (Trustee).
Sri Jyothi Mouna Nirvana Swamigal Trust

Kasavanampatti-Post
Via-Kannivadi
Dindigul-District
Tamil Nadu - 624705

 

daisy2

This page is updated on 07-10-2016